கள்ளக்குறிச்சி- நீலமங்கலம் புறவழிச்சாலை மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அங்கு விரைந்து மின்விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?