மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டதாசனூர் பிரிவு முதல் குட்டைப்புதூர் வரை உள்ள சாலையோரத்தில் மின்கம்பங்கள் அமைத்து தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனால் அங்கு இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக மாலை மற்றும் இரவு நேரங்களில் வேலை முடிந்து வரும் மக்கள் அச்சத்துடன் வீடு திரும்புகின்றனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் அந்த சாலையில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.