சங்கராபுரம் உழவர் சந்தை செல்லும் சாலையில் உயர் அழுத்த மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் உயர் அழுத்த மின்கம்பியை உயர்த்தி அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?