சாலையின் நடுவே உள்ள மின்கம்பம்

Update: 2025-03-02 09:50 GMT

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகில் சாலையின் நடுவே மின் கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி இந்த மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் நான்கு சக்கர வாகனங்கள் மோதி பெரிய அளவிலான விபத்துகள் நடக்கும் முன் இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலைகள் நடுவே உள்ள மின்கம்பத்தை சாலையோரம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்