கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம் வதியம் ஊராட்சிக்கு உட்பட்டது கீழவதியம் காலனி. இக்காலனிக்கு செல்லும் வழியில் இருந்த மரம் வெட்டப்பட்டபோது, அப்பகுதியில் இருந்த மின்கம்பம் மீது மரம் விழுந்து மின்கம்பம் உடைந்து விட்டது. இதனால் இந்த மின் கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்த மின் கம்பிகள் மின்சார வாரிய அதிகாரிகள் மூலம் துண்டிக்கப்பட்டது. உடைந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தி அதே இடத்தில் புதிய மின்கம்பம் பொருத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் தெரு விளக்குகள் எரியாமல் அப்பகுதி இருள் சூழ்ந்த பகுதியாக இருக்கிறது. அப்பகுதியை கடக்கும் பொதுமக்கள் இருளில் அச்சத்துடனே கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே உடனடியாக புதிய மின்கம்பம் நட்டு தெரு விளக்குகளை எரியச் செய்ய மின்வாரி அதிகாரிகள், குளித்தலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.