எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2025-03-02 08:20 GMT

மேலகிருஷ்ணன்புதூர் சாலை சந்திப்பு பகுதி எப்போதும் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகமாக காணப்படும். இந்த சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரத்தில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இதனை பயன்படுத்தி சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கு பொருத்தி எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்