ஆயக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. தற்போது பள்ளி தேர்வு நடப்பதால் மாணவர்கள் கடும் சிரமம் அடைகின்றனர். மேலும் வெயில் வாட்டி எடுப்பதால் மின்தடையால் முதியோர்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே மின்தடை குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.