மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பில் ஆற்றங்கரை சாலையோரம் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்கு அதில் இருந்து விடுபட்டு அந்தரத்தில் தொங்கியபடி இருந்தது. இதனால், விளக்கின் வெளிச்சம் சாலை முழுவதும் தெரியாததால் இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஒருவித அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து சென்று வந்தனர். இதுபற்றி ‘தினத்தந்தி புகார்பெட்டி’யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்கை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
-தியாகராஜன், மேலகிருஷ்ணன்புதூர்.