உத்தமபாளையம் பகுதியில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும் போது, உரிய அனுமதியின்றி சிலர் பெரிய அளவிலான பதாகைகளை சாலையோரத்தில் வைப்பதும், பட்டாசு வெடிப்பதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த பகுதியில் பலத்த காற்று வீசும் போது, பதாகைகள் சாய்ந்து அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் இருக்கிறது. எனவே அனுமதியின்றி பதாகைகள் வைப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.