எரியாத தெருவிளக்குகள்

Update: 2025-02-16 16:43 GMT

திண்டுக்கல் அனுமந்தநகரில் இருந்து, பாலகிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் மயானம் அருகே குளம் உள்ளது. அந்த குளக்கரையையொட்டி மின்கம்பங்கள் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன. அதில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து பலமாதங்களாக எரியாமல் உள்ளன. இதனால் அப்பகுதி இரவில் கும்மிருட்டாக இருப்பதால், பொதுமக்கள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்