உடைந்த மின்கம்பம்

Update: 2025-02-16 14:16 GMT
வடலூர் என்.எல்.சி. அலுவலக நகர் பகுதியில் உள்ள மின்கம்பம் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதையடுத்து கீழே விழாமல் இருக்க அந்த மின்கம்பத்திற்கு கட்டையில் முட்டு கொடுத்து வைத்துள்ளனர். இருப்பினும் அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனே சென்று வருகின்றனர். இதை தவிர்க்க சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அங்கு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்