புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலை நமண சமுத்திரத்தில் இருந்து பொன்னமராவதி சாலை, நமணசமுத்திரத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலை என மூன்று சாலைகளின் சந்திப்பு நமண சமுத்திரம் கடைவீதியில் உள்ளது. இங்குள்ள உயர் கோபுர மின்விளக்கு நீண்ட நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பயணிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உயர்மின் கோபுர விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.