திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, மோரை நியூ காலனி மெயின்ரோட்டில் உள்ள மின்கம்பம் ஆபத்தான நிலையில் சிதலமடைந்து இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பம் அமைத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.