அந்தரத்தில் தொங்கும் மின்விளக்கு

Update: 2025-02-16 09:04 GMT

மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பில் ஆற்றங்கரை சாலையோரம் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்கு அதில் இருந்து விடுபட்டு அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இதனால், விளக்கின் வெளிச்சம் சாலை முழுவதும் தெரியாததால் இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஒருவித அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். இதனை பயன்படுத்தி சமூக விரோத செயல்களும் அங்கு நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே, பாதசாரிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதகாரிகள் அந்தரத்தில் தொங்கும் மின்விளக்கை சீரமைக்க வேண்டும்.

-தியாகராஜன், மேலகிருஷ்ணன்புதூர்.

மேலும் செய்திகள்