தென்தாமரைக்குளம் பேரூராட்சி தேரிவிளையில் சுடலைமாடசாமி உள்ளது. இந்த கோவிலின் அருகில் சாலையின் நடுவில் ஒரு மின்கம்பம் போக்குரவத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் 3 சக்கரம் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தை அகற்றி சாலையோரமாக அமைக்க வேண்டும்.
-செல்வகுமார், தென்தாமரைகுளம்.