கரூர் வாங்கப்பாளையம் மெயின் சாலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் இருக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.