செங்கல்பட்டு மாவட்டம், பேரமனூர், வி.வி.நகர் எம்.ஜி.ஆர்.தெருவில் உள்ள ரேஷன் கடை எதிரே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் அருகில் உள்ள மரக்கிளை சாய்ந்து மின்கம்பத்தின் மேல் விழுந்துள்ளது. இதனால் மின்சாரகம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் மின்கம்பத்தின்மேல் உள்ள கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.