திறந்து கிடக்கும் மின் இணைப்பு பெட்டி

Update: 2025-02-09 14:07 GMT

திருவள்ளூர் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சி பாடசாலை தெருவில் உள்ள மின்கம்பத்தில் மின் இணைப்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியில் உள்ள கதவு திறந்து கிடக்கிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சாலையின் ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் திறந்த நிலையில் இருப்பதால் இந்த பகுதி வழியாக செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கவில்லை. எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் மின் இணைப்பு பெட்டியை உயர்ந்த இடத்தில் வைக்கவும், திறந்து கிடக்கும் பெட்டியின் கதவை சரி செய்யவும் நடவடிக்க எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்