பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டியில் ஏராளான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பல தெருக்களில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் தெருக்கள் இருட்டாக காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் தெரு விளக்குகள் அப்பகுதியில் உள்ள அவர்களுக்கு தகுந்தாற்போல் திசை திருப்பி வைத்துள்ளனர். இதனால் இரவு நேரங்களில் தெருக்களில் நடந்து வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் தெருவிளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.