மின்கம்பங்களை மாற்ற வேண்டும்

Update: 2025-01-26 18:34 GMT

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், நடுப்பட்டியில் கோலார்பட்டி சாலையோரம் குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக 3 மின் கம்பங்கள் சிமெண்டு பூச்சுகள் முழுவதுமாக பெயர்ந்து விழுந்து கம்பி மட்டும் தெரியும் அளவிற்கு சேதமடைந்து எலும்புக்கூடாக உள்ளது. சிதிலமடைந்த மின்கம்பத்தால் விபத்து ஏதும் ஏற்படுவதற்கு முன்பாக அவற்றை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்க கோரி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.


மேலும் செய்திகள்