புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி கச்சேரி வீதி பஸ் நிலையம் பின்பகுதியில் உள்ள மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியெ தெரிகிறது. குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால் அப்பகுதியில் வசிப்பவர்கள், குழந்தைகள் என பலரும் அச்சத்துடன் அந்த சாலையில் சென்று வருகின்றனர். இப்ப விழுமோ எப்போ விழுமோ என்ற நிலையில் காட்சி தரும் அந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.