சங்கராபுரம் பூட்டைரோடு செல்லும் சாலை பகுதியில் கோழி கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரகேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து அங்கு கொட்டப்படும் குப்பைகளையும், கோழி கழிவுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.