அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தில் ஏராளமாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள திருச்சி-அரியலூர் நெடுஞ்சாலை முக்கிய சாலையாக உள்ளது. இதன் வழியாக தினமும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், இங்குள்ள சாலை வளைவு ஒன்று வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இந்த பகுதியில் தெருவிளக்குகள் சரிவர அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், மேடு-பள்ளமாக உள்ள இந்த சாலையால் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.