தேனி அருகே மயிலாடும்பாறை பகுதியில் கடந்த ஒரு மாதமாக மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஒட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பெண்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்த மின்விளக்கை விரைவாக சரிசெய்ய வேண்டும்.