திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் இருந்து கல்லணை செல்லும் சாலையின் எதிரே 40, 41 வார்டுகளுக்கு நடுவே தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் கடந்த ஒரு மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்களும் நடந்து செல்லவும் முடியவில்லை. எனவே மின்கம்பத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.