திருவள்ளூர் மாவட்டம், அயனம்பாக்கம், ஐஸ்வர்யா நகர் முதலாவது தெருவில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள தெருவிளக்கு கடந்த 6 மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் பெண்கள் அச்சதுடன் செல்லும் நிலை உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் வெளிச்சம் தெரியாமல் விபத்து சிக்கும் ஆபத்து இருக்கிறது. எனவே, நகராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் தெருவிளக்கை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.