சென்னை அயனாவரம், முத்தம்மன் கோவில் தெருவில் மின்பெட்டி ஒன்று உள்ளது. இந்த பெட்டியில் உள்ள வயர்கள் ஆபத்தான முறையில் திறந்து கிடக்கிறது. இதனால் மழை நேரங்களில் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சிறுவர்கள் விளையாடும் பகுதி என்பதாலும், சாலை அருகில் இருப்பதாலும் விபத்து ஏற்படும் முன்பு மின்வாரிய துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.