ஏரல் தாமிரபரணி ஆற்றின் தரைப்பாலத்தில் மின்விளக்குகள் இல்லை. அதன் அருகில் ஏரல், குரும்பூர், குரங்கணி சாலைகள் பிரியும் இடத்திலும் மின்விளக்குகள் இல்லாததால் அப்பகுதி முழுவதும் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு மின்விளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.