எரியாத தெரு விளக்குகள்

Update: 2025-01-12 11:35 GMT

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் இருந்து கல்லணை செல்லும் சாலையின் எதிரே தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 40 மற்றும் 41 வார்டுகளுக்கு நடுவே இருக்கும் தேசிய நெடுஞ்சாலையின் மின் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் விபத்து மற்றும் திருட்டு சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்