திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அப்பாதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மேளவாளடியில் ஐயர்பட்டி மேற்புறத்தில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு மின் கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின் கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. எனவே இப்பகுதியில் கால்நடைகள் மற்றும் விவசாயிகள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.