திருச்சி மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட விக்னேஷ்நகர் 6-வது தெரு மேற்குவிஸ்தரிப்பு பகுதியில் சாலையின் நடுவே மின் கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பத்தை சாலையோரம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.