புதிய மின்கம்பம் வேண்டும்

Update: 2025-01-12 09:08 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, சென்னீர்குப்பம் வி.ஜி.என்.மெயின் ரோட்டில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த கம்பம் சரியாக பராமரிக்கப்படாததால் சிதலமடைந்து உடைந்து விழும் நிலையில் இருக்கிறது. மின்கம்பத்தில் அதிகமான விரிசல்கள் காணப்படுகிறது. மேலும், தெருக்களில் குழந்தைகள் விளையாடுவதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல் மின்கம்பம் விழுந்து விடுமே என அச்சத்தில் உள்ளனர். எனவே, ஆபத்தை அறிந்து மின்வாரிய அதிகாரிகள் புதிய மின்கம்பத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்