சாலையில் கிடக்கும் மின்கம்பம்

Update: 2025-01-12 09:01 GMT

சென்னை ஆதம்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் நகர் 12-வது குறுக்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மின் கம்பம் சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டு புதிய மின் கம்பம் நிறுவப்பட்டது. ஆனால் பழுதடைந்த பழைய மின் கம்பத்தை முறையாக முழுமையாக அகற்றப்படவில்லை சாலை அருகில் கிடக்கிறது. இது நடந்து செல்வோருக்கும், வாகனம் ஓட்டுவோருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்