நடவடிக்கை தேவை

Update: 2025-01-12 08:06 GMT

நாகர்கோவில் பறக்கை ரோடு பகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் எதிர்புறம் சாலையோரத்தில் ஒரு மின்கம்பத்தின் மேற்பகுதியில் பியூஸ் கேரியர் விடுபட்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் கீழே அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி ஆபத்தான நிலையில் தொங்கும் பியூஸ்கேரியரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஷேக் அலி, வெள்ளாடிச்சிவிளை.

மேலும் செய்திகள்