வாசுதேவநல்லூர் யூனியன் வெள்ளானைக்கோட்டை பொம்மாத்தம்மன் கோவிலுக்கு மேல்புறம் சாலையோரம் 3 மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. சாலை விரிவாக்கத்தின்போது மின்கம்பங்களை மாற்றி ஓரமாக நடாமல் சாலை அமைத்தனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பங்களை சாலையோரம் மாற்றி நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.