அரியலூர் மாவட்டம், வாழைக்குறிச்சி அருகே உள்ள மதனத்தூர் கிராமத்தில் சாலையோரத்தில் மின் கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின் கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்கு இரவு நேரத்தில் கடந்த சில நாட்களாக எரிவதில்லை. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இந்த வழியாக இரவு நேரத்தில் முதியவர்கள், பெண்கள் நடமாட பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.