தடிக்காரன்கோணம் ஜாண் தெருவில் ஒரு தனியார் திருமண மண்டபம் உள்ளது. இதன் அருகில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டேவிட், அருமநல்லூர்.