அந்தியூர் குப்பாண்டபாளையம் அருகே கரட்டூர் கொத்தங்காடு என்ற இடத்தில் உள்ள மின் கம்பத்தின் மேல் பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் பலத்த காற்று அடித்தால் மின் கம்பம் சாய்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஆபத்தான நிலையில் மின் கம்பம் காணப்படுகிறது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?