மன்னார்குடி பகுதி தஞ்சாவூர் மெயின் சாலை குமரபுரம் அருகே ஒரத்தநாடு பிரிவு சாலை இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இன்றி இருக்கிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் அரங்கேறி வருகின்றன. இருளை பயன்படுத்தி மர்மநபர்கள் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடவும் அதிக வாய்ப்பு உள்ளது. சாலையில் இருள் சூழ்ந்து இருப்பதால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட சாலையில் உயர்மின்கோபுர விளக்கு அமைத்திட நடவடிக்கை எடுப்பார்களா?