நாகர்கோவில் ராணித்தோட்டம் அனந்தன்பாலம் பகுதியில் கோணம் கம்பிபாலம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் தொடக்கத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தின் எதிரே சாலையோரத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதசாரிகள், வாகன ஓட்டிகள் நலன்கருதி ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டேனியல், நேசமணிநகர்.