திருக்கோவிலூர் அருகே அரும்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள தெரு மின் விளக்கு பழுதடைந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே தெருமின் விளக்கை சரி செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் எதிர்பார்க்கின்றனர்.