ஆண்டிப்பட்டி தாலுகா டி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு இல்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்துவிடுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகின்றனர். மேலும் வாகன விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே டி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்.