அந்தியூர் அருகே வெள்ளாளபாளையம் கூலி வலசு பகுதியில் உள்ள மின்கம்பத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் பலத்த காற்று அடித்தால் மின்கம்பம் சாயும் வாய்ப்புள்ளது. எனவே ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.