சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. முத்து மாரியம்மன் கோவில் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தரைவழி மின்சார கேபிள் சரியான முறையில் புதைக்கப்படாமல் சேதமடைந்துள்ளது. மழை காலம் என்பதால் மின்கசிவு ஏற்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும், பள்ளி மாணவ-மாணவிகள் செல்லும் பகுதி என்பதால், ஆபத்தை உணர்ந்து மின்வாரிய துறை அதிகாரிகள் உடனே மின்சார கேபிள்கள் சேதத்தை சரி செய்து, சரியான முறையில் புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.