தியாகதுருகம் அடுத்த உதயமாம்பட்டு ரோடு- வெங்கடேஸ்வரா நகர் வரையிலான சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு வேளைகளில் அப்பகுதியில் வழிப்பறி, திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அங்கு மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.