கடலூர் தேவனாம்பட்டினம் செல்லும் பீச் ரோட்டில் ஆபத்தான நிலையில் மின் கம்பம் ஒன்று அமைந்துள்ளது. அந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலை உருவாகியுள்ளது. எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து புதிய மின் கம்பத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.