மின்விளக்கு, அறிவிப்பு பலகை வேண்டும்

Update: 2024-12-08 17:08 GMT

ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் வழியில் மேச்சேரி பிரிவு ரோடுஅடுத்து ஏரிக்கரை பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த ஏரிக்கரை பஸ் நிறுத்தத்தில் இருந்து வலதுபுற பிரிவு சாலையானது அமரகுந்தி அருகில் உள்ள சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு சென்று வருகிறது. இந்த சாலையில் எந்த மின் விளக்குகளும் இல்லை. மேலும் அபாயகரமான வளைவு சாலையாகவும் உள்ளதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் போதுமான மின்விளக்குகள், அறிவிப்பு பலகை அமைத்து தர வேண்டும்.


மேலும் செய்திகள்