சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் மடப்புரம் ஊராட்சி வைகை வடகரை கிராமத்தில் சில நாட்களாக தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாலை இருள்சூழ்ந்து காணப்படுகிறது. வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க அச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் எரியாத மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும்.