சேதமடைந்த மின்கம்பம்

Update: 2024-12-08 12:01 GMT

திருவாரூர் மாவட்டம் தண்டளை பகுதி தெற்குதெருவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து இருக்கிறது. மின்கம்பத்தின் அடிப்பகுதி முதல் மேற்பகுதி வரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழும் வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக மின்கம்பம் இருக்கும் பகுதியை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அங்கு புதிய மின்கம்பம் நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்