சென்னை மணலி, கன்னியம்மன்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் மின் கம்பிகள் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் அருகில் பெரிய மரம் உள்ளது. இந்த மரத்தின் கிளைகள் மின்வயர்கள் மூது உராய்ந்தபடி உள்ளது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும், கிளைகள் மின்வயர்களில் உரசுவதால் தீப்பொறியும் ஏற்படுகிறது. எனவே, விபத்து ஏற்படுவதற்கு முன் மின்வாரிய துறை அதிகாரிகள் மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.